இலங்கையில் இயங்கி வரும் இரு முக்கிய நிகாயக்களான அமரபுர மறறும் ரமன்னா நிகாயக்களை ஒன்றிணைத்து செயற்படுவதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளதையடுத்து இதற்கான ஒப்பந்தம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கைச்சாத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனித்தனியாக இயங்கி வரும் கொள்கைக் கூறுகளான இவ்விரு நிக்காயக்களும் ஒன்றிணைந்து ஸ்ரீலங்கா அமரபுர ரமன்னா மகா சங்க சபாவ என அடையாளப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல வருட பேச்சுவார்த்தையின் பின்னணியில் இவ்வொன்றிணைவு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment