பத்தரமுல்ல பகுதியின் பிரபல ஹெரோயின் கடத்தல் பேர்வழி வெலிவிட்ட சுத்தா என அறியப்படும் மகேஷ் வசந்த திசாநாயக்க (32) எனும் நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கைதாகும் போது குறித்த நபரிடம் வெளிநாட்டுத் தயாரிப்பான கைத்துப்பாக்கி ஒன்றும் போதைப்பொருளும் கைவசம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
போதைப் பொருள் வர்த்தகர்களே நாட்டைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்குவதாக தெரிவிக்கும் ஜனாதிபதி மரண தண்டனையை மீளவும் கொண்டு வர வேண்டும் என தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment