இலங்கையில் 'தாக்குதல் அச்சம்': தமது பிரஜைகளை எச்சரிக்கும் அமெரிக்கா - sonakar.com

Post Top Ad

Sunday, 4 August 2019

இலங்கையில் 'தாக்குதல் அச்சம்': தமது பிரஜைகளை எச்சரிக்கும் அமெரிக்கா


ஈஸ்டர் தாக்குதலையடுத்து இலங்கையில் சுற்றுலாப் பயணத் தளங்கள், மத வழிபாட்டுத்தளங்கள், பொது மக்கள் கூடும் இடங்களில் தொடர்ந்தும் தாக்குதல் அச்சம் நிலவுவதாக தகவல் வெளியிட்டிருந்த அமெரிக்கா, தொடர்ந்தும் இலங்கைக்க சுற்றுலாப் பயணிகளாக வரும் தமது நாட்டு பிரஜைகளை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.



பெரஹர நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ள நிலையில் அமெரிக்க அரசின் எச்சரிக்கையை வலியுறுத்தி கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது பிரஜைகளை அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி தாக்குதல்கள் இடம்பெறக்கூடும் என்பதால் சுற்றுலாப் பிரயாணிகள் மற்றும் இலங்கையில் உள்ள அமெரிக்க பிரஜைகள் கூடுதல் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment