இலங்கையில் மஹிந்ரா நிறுவனத்தின் வாகன தொழிற்சாலை திறப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 17 August 2019

இலங்கையில் மஹிந்ரா நிறுவனத்தின் வாகன தொழிற்சாலை திறப்பு


2000 மில்லியன் ரூபா முதலீட்டில் இலங்கையில் தமது நேரடி வாகன தயாரிப்பு தொழிற்சாலையை ஆரம்பித்துள்ளது இந்தியாவின் மஹிந்ரா நிறுவனம்.



வருடத்திற்கு 5000 வாகனங்களை பொருத்தும் பணிகள் இங்கு மேற்கொள்ளப்படவுள்ளதுடன் ஆரம்ப கட்டமாக 200 பேரளவில் தொழில்வாய்ப்பைப் பெறவுள்ளதாகவும், இது முதற்கட்டமே எனவும் காலப் போக்கில் தொழிற்சாலையின் அளவும் வேலைவாய்ப்பின் அளவும் அதிகரிக்கப்படும் எனவும் இன்றைய அங்குரார்ப்பண நிகழ்வில் வைத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்காலத்தில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்வதற்கான திட்டங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ள அதேவேளை, இதனூடாக மஹிந்ரா வாகனங்களின் இறக்குமதி வரி வெகுவாகக் குறைவதுடன் வாகன விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment