ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாபே ராஜபக்சவின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என தெரிவிக்கிறார் கெஹலிய ரம்புக்வெல.
போகும் இடங்கள் எல்லாம் கோட்டாபேயை நோக்கி பெருமளவு மக்கள் வருவதனால் அவரது பாதுகாப்பு தொடர்பில் மேலதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என கெஹலிய விளக்கமளித்துள்ளதுடன் இது தொடர்பில் அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வ கோரிக்கையொன்றை முன் வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
கோட்டாபே ராஜபக்சவின் இரட்டைக் குடியுரிமை விவகாரம் தொடர்ந்தும் இழுபறிக்குள்ளாகியுள்ள அதேவேளை பிரச்சார நடவடிக்கைகளும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment