ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை சரியான தருணத்தில் சரியான முறையில் தெரிவு செய்து கட்சித் தலைமை அறிவிக்கும். அதுவரை தமக்குத் தேவையான வகையில் பொதுக் கூட்டங்களை நடாத்தி கட்சிப் பெயயரை கெடுக்காதீர் என விசனம் வெளியிட்டுள்ளார் ரவி கருணாநாயக்க.
சஜித் பிரேமதாச தன்னிச்சையாக தன்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்து செயற்படுவதாக கட்சி மட்டத்தில் ஒரு பிரிவினர் குற்றஞ்சாட்டுகின்ற அதேவேளை 50க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜித்துக்கு ஆதரவாகவும் கையொப்பமிட்டுள்ளனர்.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்ந்தும் இழுபறிக்குள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment