ஆண் துணையின்றி பெண்கள் வெளிநாடு செல்வதற்கான அனுமதியை வழங்கி உத்தரவிட்டுள்ளது சவுதி மன்னரின் நிர்வாகம்.
பெண்களுக்கு பல்வேறு உரிமைகள் மற்றும் பெண்கள் தொடர்பான சட்டங்களில் தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டிருந்த குறித்த விவகாரம் தொடர்பில் சவுதி மன்னர் தரப்பு இன்று அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இப்பின்னணியில் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்களின் அனுமதியின்றியே கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கவும் வெளிநாடு செல்லவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment