இன்றைய தினம் கட்டுவாபிட்டிய சென் செபஸ்தியன் தேவாலய வீதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ சிலையொன்றின் மீது கல் வீச்சு இடம்பெற்றதையடுத்து அப்பகுதியில் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்க கார்டினல் மல்கம் ரஞ்சித் அங்கு நேரடியாக விஜயம் செய்திருந்தார்.
இதன் போது அங்கு உணர்ச்சிவசப்பட்டிருந்த பொது மக்களை தேவாலயத்துக்கு அழைத்து உரையாற்றிய கார்டினல், கல் வீசியது யாராகவும் இருக்கலாம், ஆனால் சந்தேகத்தின் பேரில் எந்த ஒரு சமூகத்தையும் நோக்கி விரல் நீட்டி சர்ச்சைகளை உருவாக்கக் கூடாது என அறிவுரை வழங்கியதுடன் இப்பிரச்சினையை மறந்து மக்களை அமைதியாக வீடு திரும்புமாறு கோரியிருந்தார்.
இப்பின்னணியில் பிரதேசததில் பதற்றம் தணிந்த போதிலும் தொடர்ந்தும் இன முறுகலை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment