அண்மையில் இராஜினாமா செய்த மத்திய மற்றும் தென் மாகாண ஆளுனர்களுக்கு வேறு மாகாணங்களின் ஆளுனர்களாக பதவி வழங்கியுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
இதனடிப்படையில் மைத்ரி குணரத்ன ஊவா மாகாண ஆளுனராகவும், கீர்த்தி தென்னக்கோன் மத்திய மாகாண ஆளுனராகவும் நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஹேமல் குணசேகர தென் மாகாண ஆளுனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தமக்கெதிரான விசாரணைகளுக்கு இடமளிக்கும் வகையில் பதவி விலகிய இரு முஸ்லிம் ஆளுனர்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment