ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய கூட்டணி உருவாக்கம் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பை இனியும் தாமதப்படுத்த வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சிக்கு கூட்டணிக் கட்சிகள் அழுத்தம் விடுத்து வருகின்றன.
இந்நிலையில், இன்னும் சில தினங்களுக்குள் தனது முடிவை அறிவிக்கவுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க முக்கிய பங்காளிக் கட்சிகளுக்கு வாக்குறுதியளித்துள்ளதாக அறியமுடிகிறது.
இதேவேளை, கட்சியின் உத்தியோகபூர்வ அறிவிப்புக்காகக் காத்திராது சஜித் பிரேமதாச தனது பிரச்சார நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment