இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பதற்றத்தைத் தூண்டுவது குறிப்பிட்ட சிலரே அன்றி சிங்கள மக்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் இல்லையென தெரிவிக்கின்ற தம்பர அமில தேரர், வெளிநாட்டில் வாழும் முஸ்லிம்கள் அச்சமின்றி நாட்டுக்கு வர வேண்டும் என தெரிவித்தார்.
நேற்று முன் தினம் (10) அவுஸ்திரேலியா, சிட்னி நகரில் அங்கு வாழும் இலங்கை முஸ்லிம்கள் சமூகம் சார்பாக விடுக்கப்பட்டிருந்த அழைப்பையேற்று சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், 30 வருட யுத்த காலத்தின் போது இராணுவத்தில் முஸ்லிம்களின் பங்கு குறித்தும் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், சஜித் பிரேமதாசவே ஜனாதிபதியாக வருவார் எனவும் கோட்டாபே ராஜபக்சவை இலகுவாகத் தோற்கடிக்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டிருந்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சோனகர்.கொம்முக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சிட்னி, கலிபோல் சமூக நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வினை அங்கு வாழும் இலங்கை முஸ்லிம்கள் சார்பாக ரஹ்மத்துல்லாஹ், அலி சப்ரி மற்றும் சமீல் உட்பட்ட குழுவினர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Musthafa A.
-Musthafa A.
No comments:
Post a Comment