கூட்டணி: மஹிந்த - மைத்ரி நேரடி பேச்சுவார்த்தை - sonakar.com

Post Top Ad

Tuesday, 6 August 2019

கூட்டணி: மஹிந்த - மைத்ரி நேரடி பேச்சுவார்த்தை


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக மஹிந்த ராஜபக்ச பகிரங்கமாக அறிவிக்கப்படவுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - பெரமுன இடையிலான எதிர்கால கூட்டணி உறவு பற்றி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன - மஹிந்த ராஜபக்ச இடையே நேற்றிரவு நேரடி பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.


கடந்த வருடம் ஒக்டோபரில் ஏற்பட்ட அரசியல் பிரளயத்தின் பின்னணியில் இருவருக்குள்ளும் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாககக் கருதப்பட்ட போதிலும் மைத்ரியை ஜனாதிபதி வேட்பாளராக ஏற்பதற்கு மஹிந்த அணி கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருகிறது. 

இந்நிலையில், கோட்டாபே ராஜபக்ச பெரமுன வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றமையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் மைத்ரி போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment