கொழும்பு உட்பட நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற பெருநாள் தொழுகை - sonakar.com

Post Top Ad

Monday, 12 August 2019

கொழும்பு உட்பட நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற பெருநாள் தொழுகை


மேமன் சங்கத்தின் புனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை கொழும்பு காலி முகத்திடலில் இன்று காலை சங்கத்தின் தலைவர் அப்துல் சத்தார் அனிஸ் ஷானி தலைமையில் இடம் பெற்றது.


பெருநாள் தொழுகையை மௌலவி அலி மொஹமட் பட்டேல் நடாத்தினார், குத்பா பிரங்க உரையை ஹாபிஸ் இஹ்ஷான் காதிரி நடாத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அஸாத் ஷாலி, சமுக சேவையாளர் புரவலர் ஹாசிம் உமர். மேமன் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருமளவானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது முஸ்லிம் சமுகத்திற்கும், நாட்டிற்கும் விமோசனமும், பாதுகாப்பும் வேண்டி விஷேட துஆப் பிரார்த்தனையும் இடம் பெற்றது. பெருநாள் தொழுகையை முன்னிட்டு பொலிஸார் விஷேட பாதுகாப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-ஏ.எஸ்.எம்.ஜாவித் 

கல்குடா


ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா கல்குடா கிளையின் ஏற்பாட்டில் திறந்த வெளியிலான ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையும் கொத்பா பேருரையும் இன்று (12.08.2019) திங்கள் கிழமை செம்மண்ஓடை அல்ஹம்ரா விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

மாளிகைக்காடு


மாளிகைக்காடு பிரதேசத்தில் இன்று(12) ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகை மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இத்தொழுகையில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகையினை மௌலவி ஏ.ஆர்.முகம்மட் சப்ராஸ் நடத்தி வைத்ததுடன் குத்பா பேருரையினையும் நிகழ்த்தினார்.

-நூருள் ஹுதா உமர் 

கல்முனை 


கல்முனை அன்ஸாரிஸ் சுன்னதில் முஹம்மதியா மற்றும்  ஹுதா ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகத்தின் ஏற்ப்பாட்டில்
ஹஜ் பெருநாள் தொழுகை கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள  ஹுதா திடலில் இன்று (12/8/2019)  நடைபெற்றது இதில் ஏராளமான  ஆண்கள் , பெண்கள்   கலந்து கொண்டனர். 

இப்பெருநாள்  தொழுகை மற்றும் குத்பா பிரசங்கத்தினை மெளலவி எம்.ஐ.எம்.றிஸ்வான் (றியாதி) அவர்கள் நடாத்தி வைத்தார்.

-எம்.என்.எம்.அப்ராஸ்,எஸ்.அஸ்ரப்கான்

பறஹகதெனிய


பறஹகதெனிய ஜாமிஉத் ஜும்ஆப் பள்ளிவாசலின்  ஏற்பாட்டில் புனித  ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை பறகஹதெனிய அரபுக் கல்லூரியின் திடலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பெருநாள் தொழுகையினையும் குத்பா பேருரையிiயும்  மௌலவி அன்சார் ரியாதி நடத்தி வைத்தார்.

-இக்பால் அலி

உடுநுவரை


-M.I.M.Niyass

No comments:

Post a Comment