நீர் கொழும்பு முஸ்லிம் பகுதிகளில் தொடரும் பதற்றம் மற்றும் அவ்வப்போது இடம்பெற்று வரும் அசம்பாவிதங்கள் தொடர்பில் ஆட்சியாளர்களின் கவனத்தைப் பெற்றுக் கொள்ளும் நிமித்தம் நாளைய தினம் (16) மதியம் 1.15 அளவில் பிரதேச மக்களால் அங்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போதைப் பொருள் பாவனையாளர்களால் அவ்வப்போது சில பதற்றங்கள் உருவாக்கப்பட்டு வருகின்ற அதேவேளை, தனி நபர் பிரச்சினைகளும் சமூகப் பிரச்சினைகளாக்கப்படும் முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையிலேயே, நாளைய தினம் இவ்வாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment