முதலாவதும், இரண்டாவதும், மூன்றாவதும் முன்னுரிமைகள் நாடாகவே இருக்க வேண்டும் அதனை மறந்து தனிப்பட்ட தேவைகளுக்காக திசை மாறக் கூடாது என பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபேவுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர் மகாநாயக்கர்கள.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரானதையடுத்து கண்டியில் மகாநாயக்கர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெறச் சென்றிருந்த வேளையிலேயே இவ்வாறு அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதுடன் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க தேர்தலை வெல்வதற்கு முயற்சிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சகோதரனை அழைத்துக்கொண்டு மஹிந்த ராஜபக்ச நேற்றைய தினம் மகாநாயக்கர்களை சந்திக்கச் சென்றிருந்தமையும் தனது சகோதரனை நாட்டு மக்களும் சகோதரனாக ஏற்றுக்கொண்டிருப்பதாக மாநாட்டில் வைத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment