நேற்றைய தினம் பெரமுன வேட்பாளர் கோட்டாபே கலந்து கொண்ட நிகழ்வுக்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் பாரிய அளவில் அச்சம் வெளியிடப்பட்டு வருகிறது.
தேர்தல் கால வன்முறை கண்காணிப்புக் குழுத் தலைவர் மஞ்சுல கஜநாயக்கவும் இது தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள அதேவேளை ஆட்சிக்கு வர முன்னரே இவ்வாறு ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறை இடம்பெறுவது ஆபத்தானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்சமயம் ஊடக சுதந்திரம் பெருமளவு இருக்கும் அதேவேளை மஹிந்த ஆட்சியில் ஊடகவியலாளர்கள் கொலை மற்றும் காணாமலாக்கப்பட்ட சம்பவங்களை நினைவு கூர்ந்து சமூக வலைத்தளங்களில் அச்சம் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment