கார்பட் இடப்பட்ட வீதியின் பகுதியை அமைச்சர் கபீர் ஹாஷிம் பிற்பகல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்க ஏற்பாடாகியிருந்த நிலையில் காலையிலேயே அங்கு சென்று பெரமுன தரப்பினர் ரிப்பன் வெட்டிய நிகழ்வு நேற்று கினிகத்ஹேனயில் இடம்பெற்றுள்ளது.
அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் ஹெலப்பிரிய நந்தராஜே இவ்வாறு அவசர அவசரமாக ரிப்பன் வெட்டியுள்ளார். பிரதேசத்தில் இவ்வபிவிருத்தி நடவடிக்கைகள் மஹிந்த ராஜபக்சவினாலேயே ஆரம்பிக்கப்பட்டதாகவும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு உரிமை கொண்டாடத் தேவையில்லையெனவும் குறித்த நபர் விளக்கமளித்துள்ளார்.
எனினும், பிற்பகல் திட்டமிட்டபடி சம்பிரதாயபூர்வமாக பாதையைத் திறந்து வைத்த அமைச்சர் கபீர் ஹாஷிம் மக்கள் பாவனைக்காக பாதையைக் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment