ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கும் புதிய அரசியல் கூட்டணி தமது கட்சியின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என தெரிவிக்கிறார் லக்ஷ்மன் கிரியல்ல.
ஹெல உறுமய, மு.கா, அ.அ.ம.கா உட்பட முக்கிய கட்சிகள் அனைத்தும் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியாக இயங்கவுள்ள அதேவேளை தேசிய ஜனநாயக முன்னணியெனும் பெயரில் புதிய கூட்டணியொன்றை அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டணியில் முக்கியமான 10 பேர் தலைமைத்துவ சபையில் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும் கூட்டணியின் கட்டுப்பாடு ஐக்கிய தேசியக் கட்சி வசமே இருக்கும் என கிரியல்ல விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment