13ம் திருத்தச் சட்டத்துக்கமைவாக தமிழ் பகுதிகளுக்கு (வடக்கு) காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தினை வழங்குவதே நியாயம் என முல்லைத்தீவில் வைத்து தெரிவித்துள்ளார் நவின் திசாநாயக்க.
தனது தந்தையின் ஜனாதிபதி கனவை தான் எப்படியும் நிறைவேற்றப்போவதாக தெரிவித்திருக்கும் நவின், மலையக மக்களின் வாக்குகள் இன்றி யாராலும் ஜனாதிபதியாக முடியாது என்றும் தெரிவித்து வருகிறார்.
நேற்றைய தினம் சஜித் பிரேமதாசவின் பதுளை பொதுக் கூட்டம் இடம்பெற்ற நிலையில் சிங்கள தலைவர்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளை மதிக்க வேண்டும் என நவின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment