பெரமுன தரப்பிலிருந்து கோட்டாபே ராஜபக்ச வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது போன்று மேலும் சில வேட்பாளர்கள் வரப் போகிறார்கள். அது ஒரு போட்டி சூழலை உருவாக்கும் ஆனாலும் ஈற்றில் யானை ஆட்சியே உருவாகும் என தெரிவிக்கிறார் ரவி கருணாநாயக்க.
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்படுவதற்கு எதிராக ரவி கருணாநாயக்கவே குரல் கொடுத்து வந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கோட்டாபே ராஜபக்ச இலகுவாகத் தோற்கடிக்கப்படக்கூடிய நபர் என ஐ.தே.க பிரமுகர்கள் பலர் தெரிவித்து வருகின்ற அதேவேளை, பாரிய கூட்டணியொன்றுக்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment