சில ஊடகங்கள் முயற்சிப்பது போன்று ஐக்கிய தேசியக் கட்சியை அத்தனை எளிதாக துண்டாட முடியாது என தெரிவிக்கின்ற அக்கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம், தலைவர் - பிரதித்தலைவர் ஒன்றிணைந்தே கட்சியை முன்னெடுத்துச் செல்வார்கள் என தெரிவிக்கிறார்.
அரசு செய்யும் நற்காரியங்கள் பரவலாக விளம்பரப்படுத்தப்படவில்லையாயினும் கூட பெருமளவு மக்கள் நலத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மக்கள் அறிவார்கள் எனவும் அகில மேலும் தெரிவிக்கிறார்.
கட்சியின் ஒற்றுமையை முற்படுத்தி அனைவரும் இணைந்து செயற்படுவார்கள் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி அமைக்கும் கூட்டணியே வெற்றி பெறும் எனவும் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment