மோசமான காலநிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய கட்டார் மற்றும் எயார் அரேபியா விமானங்கள் மத்தள விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து மீண்டும் கட்டுநாயக்க வந்தடைந்துள்ளனர்.
அதிகாலையில் இலங்கையில் தரையிறங்கவிருந்த கட்டார் மற்றும் எயார் அரேபியா விமானங்களே பயணிகளுடன் இவ்வாறு முதலில் மத்தள அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து மீண்டும் சில மணி நேரத்தில் கட்டுநாயக்க புறப்பட்டு வந்தடைந்துள்ளன.
நாட்டில் பல பகுதிகளில் காலநிலை குறித்த அவதானம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment