பெல்மடுள்ளை கடையொன்றிலிருந்து 30 மில்லியன் ரூபா பெறுமதியான இரத்தினக் கல், தங்கம் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இரு ஆசிரியர்கள், இரு முன்னாள் இராணுவ சிப்பாய்கள் உட்பட ஐவர் கைது செய்ய்பட்டுள்ளனர்.
ஜுலை 27ம் திகதி இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் இடம்பெற்ற விசேட நடவடிக்கையினால் இக்கைதுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கொள்ளையிடப்பட்ட இரத்தினக் கற்கள் ஏலமிடப்படுவதாக கிடைக்கப் பெற்ற தகவலினையடுத்து பொலிசார் இச்சுற்றி வளைப்பினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment