நாட்டின் எதிர்கால நலன் கருதியே மரண தண்டனையைத் தான் அமுல்படுத்த முயற்சிப்பதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
இலங்கையில் மரண தண்டனை அமுலுக்கு வருவதற்கு எதிராக நாடாளுமன்றில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முன்னேற வேண்டுமாக இருந்தால் நாட்டில் போதைப் பொருள் வர்த்தகம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் எனவும் அதற்கு மரண தண்டனை அவசியப்படுவதாகவும் மைத்ரி விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையின் போதைப் பொருள் வர்த்தகம் சிறைச்சாலையிலிருந்தே கட்டுப்படுத்தப் படுவதாகவும் அண்மையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment