கொழும்பு 10, மாளிகாகந்தை வீதியில் நேற்றிரவு வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தினால் ஒருவர் காயமுற்றுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
77 வயது நபர் ஒருவரே இவ்வாறு காயமுற்றுள்ள அதேவேளை, பண விவகாரம் ஒன்றின் பின்னணியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அங்கு வந்த நபர் தரையை நோக்கிச் சுட்ட போதே குறித்த வயோதிபர் சிறு காயத்துக்குள்ளானதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
ஈஸ்டரின் பின் சற்று தணிந்திருந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment