அவசரகால சட்டம் நீடிக்கப்படப் போவதில்லையென அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் புர்கா - நிகாப் தடையை நீக்குவது பற்றி எந்த நடவடிக்கையும் அவசியமில்லையென தெரிவிக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் அஷு மாரசிங்க.
அவசர கால சட்டம் அமுலில் இருக்கும் போது முகம் மூடும் வகையில் ஆடைகள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், அது அவசரகால சட்டத்தின் கீழ் தடை செய்யப்படவில்லையென்பதால் அது பற்றி பேசுவதற்கு எதுவுமில்லையென மாரசிங்க மேலும் விளக்கமளித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலையடுத்து நாட்டின் பாதுகாப்பு கருதி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment