ஈஸ்டர் தாக்குதலோடு தொடர்பு பட்ட (இறந்தவர்கள் தவிர) அனைவரும் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுடன் தேநீர் அருந்தியவர்களையும் தேடிப் பிடிக்கவுள்ளதாக தெரிவிக்கிறார்.
ரவிராஜ், மகேஸ்வரன் கொல்லப்பட்டதன் பின்னணியில் யாரையும் அப்போது பதவியிலிருந்து அரசு கைது செய்யவில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் 200 பேர் தற்சமயம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.
பொறுப்புள்ள அரசாங்கமாக உடனுக்குடன் நடவடிக்கையெடுத்து நாட்டின் பாதுகாப்பையும் சட்ட - ஒழுங்கையும் தமது அரசு தொடர்ந்து நிலை நாட்டி வருவதாக ரணில் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment