ACல் வாழும் பசுக்கள் இறக்குமதி தேவையா? புத்திக விசனம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 6 August 2019

ACல் வாழும் பசுக்கள் இறக்குமதி தேவையா? புத்திக விசனம்!



இலங்கையில் மக்கள் படும் அவஸ்த்தைக்கே தீர்வில்லாத நிலையில் சில நிறுவனங்கள் போடும் ஆட்டத்துக்கெல்லாம் வளைந்து கொடுக்கும் அதிகாரிகள் குளிரூட்டப்பட்ட இடங்களில் மட்டுமே வாழக்கூடிய பசுக்களையும் இறக்குமதி செய்வதாக விசனம் வெளியிட்டுள்ளார் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ள புத்திக பத்திரன.



உள்நாட்டு பொருளாதார கொள்கையொன்றே இல்லாத நிலையிலேயே நாடு இயங்கி வருவதாகவும் வளங்கள் வீணடிக்கப்படுவதாகவும் விசனம் வெளியிட்டுள்ள அவர், பல அரச நிறுவனங்களை பின்னிருந்து இயக்குவது தனியார் நிறுவனங்கள் எனவும் அதற்கேற்ப இவர்களும் ஆடுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

தூர நோக்கற்ற இவ்வாறான செயற்பாடுகள் ஊடாகவே அடுத்தடுத்த தலைமுறையினர் அரசியலை வெறுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment