அமெரிக்காவின் 9/11 தாக்குதலில் பயன்படுத்தப்பட்டிருந்த யூரியா நைட்ரேட் இரசாயனம் அண்மைய ஈஸ்டர் தாக்குதலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவுக்கழு முன் சாட்சியமளிக்கையில் தகவல் வெளியிட்டுள்ளார் ஜனாதிபதியின் விசேட விசாரணைக்குழுவில் பங்கேற்கும் நீதிபதி வஜித் மலல்கொட.
ஏப்ரல் 20ம் திகதி மாலை, 16 மணித்தியாலத்துக்கு முன்பாகவே மறுதினம் பாரிய தாக்குதல் ஒன்று இடம்பெறவுள்ளது தொடர்பில் உறுதியான தகவல்கள் கிடைக்கப் பெற்றும், ஏப்ரல் 16ம் திகதி காத்தான்குடியில் குண்டு வெடிப்பொன்று இடம்பெற்றதையடுத்து பெறப்பட்ட விசாரணைத் தகவல்களைக் கொண்டும் பல்வேறு ஆதாரங்கள் இருந்தும் 21ம் திகதி தாக்குதலை தவிர்க்காது போயிருப்பதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், தொடர்ந்தும் சஹ்ரானுடன் தொடர்பிலிருந்த நபர்கள், பயிற்சி பெற்றவர்கள் கைதுகள் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment