ஹக்கீமின் 'இணைப்பாளர்கள்' 85 பேருக்கு 160 மில்லியன் ஊதியம்! - sonakar.com

Post Top Ad

Friday, 23 August 2019

ஹக்கீமின் 'இணைப்பாளர்கள்' 85 பேருக்கு 160 மில்லியன் ஊதியம்!



நீர்வழங்கல் அமைச்சர் ரவுப் ஹக்கீமின் இணைப்பாளர்கள் என்ற அளவில் 2015 முதல் 85 பேர் பணியாற்றி வருவதுடன் 160 மில்லியன் ரூபா ஊதியமாக வழங்கப்பட்டுள்ளதாக கோப் விசாரணையில் தெரிய வந்துள்ளது.



இதில் ஒரு சிலருக்கு 250,000 ரூபா வரை கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றைக் கோரியுள்ளார் கோப் குழு தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி.

குறித்த 'இணைப்பாளர்கள்' அமைச்சில் செய்த பணி தொடர்பில் அறிந்துகொள்ளும் நிமித்தமே முழுமையான அறிக்கை கோரப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment