செப்டம்பர் 2 முதல் டிசம்பர் 8ம் திகதிக்குட்பட்ட காலத்துக்குள் ஜனாதிபதி தேர்தலை நடாத்தியாக வேண்டும் எனவும் அரசாங்கத்துக்கு அதனை பின் போடும் எண்ணம் எதுவுமில்லையெனவும் தெரவிக்கிறார் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன.
ஜனவரி 8ம் திகதி வரை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பதவியில் வீற்றிருக்க முடியுமாயினும் கூட வேறு ஒருவர் தேர்தலை வெல்லுமிடத்து அவர் உடனடியாகவே பதவியேற்கவும் முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு பிரகாரம் டிசம்பர் 8ம் திகதிக்குள் தேர்தல் நடாத்தப்பட்டே ஆக வேண்டும் என வஜிர தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment