கடந்த ஒரு மாத கால விசேட நடவடிக்கையின் பின்னணியில் இதுவரை குடிபோதையில் வாகனம் செலுத்திய 7318 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஜுலை மாதம் 5ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த நடவடிக்கையின் பயனாக இவ்வாறு பெருந்தொகையானோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 150 மில்லியனுக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னர் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று 4ம் திகதி காலை 6 மணியிலிருந்து இன்று காலை 6 மணி வரையான 24 மணி நேரத்தில் மாத்திரம் 174 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment