கண்டி எசல பெரஹர பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு 7000 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏலவே இராணுவத்தினரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை பெரஹர சுமுகமாக நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலையடுத்து வெசக் பண்டிகை களையிழந்து போயிருந்த நிலையில் பெரஹரவை திட்டமிட்டபடி நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment