களுத்துறை: பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 52 பேர் காயம் - sonakar.com

Post Top Ad

Sunday, 4 August 2019

களுத்துறை: பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 52 பேர் காயம்



களுத்துறை வடக்கு பிரதேசத்தில் எல்பிட்டியிலிருந்து கொழும்புக்கு செனறு கொண்டிருந்த இ.போ.ச பேருந்து ஒன்று தனியார் பேருந்து ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் 52 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று காலை 5.15 அளவில் இடம்பெற்றுள்ளது.


காலி நோக்கிச் சென்ற பேருந்துடன் வஸ்கடுவ சந்தியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் காயமுற்றவர்கள் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

காயமுற்றவர்களுள் 8 பெண்கள் மற்றும் குழந்தையொன்றும் உள்ளடக்கம் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment