இன்று முதல் எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, கனடா, இந்தியா உட்பட 48 நாட்டவர்க்கு இலங்கைக்கான சுற்றுலாப் பயண விசா கட்டணம் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பாக இத்திட்டம் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் அமுலுக்கு வருகிறது.
வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை ஊக்குவிக்குமுகமாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment