உட்கட்சிப் பூசல்களை முடிவுக்குக் கொண்டு வந்து ஓகஸ்ட் 31ம் திகதிக்குள் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தாக வேண்டும் என தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.
கடந்த வார சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டணி கட்சிகளின் உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது ஐ.தே.க தமது தீர்க்கமான முடிவை அறிவிக்க வேண்டும் என சம்பிக்க தெரிவிக்கிறார்.
கடந்த வார இணக்கத்தின் அடிப்படையில் கூட்டணி கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளர் முன்மொழிவை மேற்கொள்ளலாம் எனவும் தலைமைத்துவ சபை அதனை அங்கீகரிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, கூட்டணிக் கட்சிகளில் 50 வீதத்துக்கும் அதிகமானோர் சஜித் பிரேமதாசவை ஏற்றுக்கொள்ளவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment