306 மில்லியன் பண மோசடி: சஜின் வாசுக்கு எதிராக குற்றச்சாட்டு - sonakar.com

Post Top Ad

Thursday, 8 August 2019

306 மில்லியன் பண மோசடி: சஜின் வாசுக்கு எதிராக குற்றச்சாட்டு


ஜனாதிபதி தேர்தல் எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்காலிகமாக மறந்து போயிருந்த பல பெயர்கள் மீண்டும் ஞாபகப்படுத்தப்பட்டு வரும் தொடர்ச்சியில் இன்று முன்னாள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் மஹிந்த ராஜபக்சவின் நெருக்கமானவருமான சஜின் வாசுக்கு எதிராக மீண்டும் பண மோசடி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.


306.26 மில்லியன் ரூபா பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு உயர் நீதிமன்றில் சட்டமா அதிபர் குற்றச்சாட்டை தாக்கல் செய்துள்ளார்.

கொஸ்மோஸ் என்ற பெயரில் இயங்கிய நிறுவன குழுமம் ஊடாகவே இம்மோசடி இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment