செப்டம்பர் 3ம் திகதி SLFPயின் உத்தியோகபூர்வ அறிவிப்பு! - sonakar.com

Post Top Ad

Thursday, 15 August 2019

செப்டம்பர் 3ம் திகதி SLFPயின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!



எதிர்வரும் செப்டம்பர் 3ம் திகதி ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் அறிவிப்பும் தாமதப்படுத்தப்பட்டு வரும் நிலையில் மைத்ரிபால சிறிசேன போட்டியிடப் போவதில்லையென்று தகவல்கள் தெரிவிககின்றன. எனினும், அவர் பெரமுன வேட்பாளரையே ஆதரிக்கக்கூடும் என பெயர் குறிப்பிட விரும்பாத கட்சி முக்கியஸ்தர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், சுதந்திரக் கட்சியின் மஹிந்த அதிருப்தியாளர்கள் தொடர்ந்தும் சு.க தனித்துப் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment