கொழும்பு பாதுகாப்பு அமைச்சில் கடமையில் இருந்த வேளையில் 27 வயது இராணுவ சிப்பாய் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
பொலன்நறுவ, அத்தனகடவல பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு தனது துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை 4.10 அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவம் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment