எதிர்வரும் 18ம் திகதி மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளதாக அக்கட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
பழைய திருடர்கள் - புதிய திருடர்கள், இரு தரப்பையும் இல்லாதொழித்து நாட்டுக்கு சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்கக் கூடிய தலைமைத்துவத்தை ஜே.வி.பி முன் நிறுத்தும் என கட்சிப் பிரமுகர் விஜித ஹேரத் விளக்கமளித்துள்ளார்.
இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணியொன்றை அமைப்பதற்கு ஜே.வி.பி முயற்சி செய்து வந்த நிலையில் தற்போது அனைத்தும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment