எதிர்வரும் ஒக்டோபர் 15ம் திகதி முதல் விசேட உயர் நீதிமன்றில் கோட்டாபே ராஜபக்ச உட்பட ஐவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள டி.ஏ ராஜபக்ச நினைவக விவகார வழக்கு தினசரி விசாரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி அரசு தொடர்ச்சியாக இவ்வாறு தெரிவித்து வருவதுடன் விசேட உயர் நீதிமன்றத்தையும் கடந்த வருடம் உருவாக்கியிருந்தது. எனினும், அறிவிக்கப்பட்டது போன்று துரித விசாரணைகள் இது வரை இடம்பெறாத நிலையில் தற்போது இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபே ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment