ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் கைது செய்யப்பட்டுள்ள 41 பேரிடமிருந்து 136 மில்லியன் ரூபா பணம் முடக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர்களுக்குச் சொந்தமான சுமார் 1 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தின் பின்னணி மற்றும் வலையமைப்பு தொடர்பில் தொடர்ந்தும் தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதுடன் கைதுகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையிலேயே 41 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதன் ஊடாக பாரிய தொகை பணமும் முடக்கப்பட்டுள்ளமை குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment