ஈஸ்டர் தாக்குதலின் பின் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இலங்கையில், தெஹிவளை பகுதியில் வசிக்கும் முஸ்லிம் நபர் ஒருவருக்கு வந்த 1 கோடி ரூபா பணம் பற்றி விசாரணை நடாத்தப்பட்டு வருகிறது.
இன்றைய தினம் இது பற்றிய வழக்கு விசாரணை இடம்பெற்ற நிலையில் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் இது பற்றிய தகவலை கல்கிஸ்ஸ மஜிஸ்திரேட்டுக்கு தெரிவித்துள்ளனர்.
டிமெல் மாவத்தையில் வசிக்கும் முஸ்லிம் நபர் ஒருவருக்குச் சொந்தமான தனியார் நிறுவனத்துக்கு, ஏப்ரல் 24ம் திகதி இவ்வாறு பாரிய தொகை பணம் வந்துள்ள நிலையில் அது தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்துக்கமைவாக இவ்விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment