ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லையென தெரிவிக்கிறார் ரஞ்சன் ராமநாயக்க.
இன்றைய தினம் கட்சி முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி இது தொடர்பில் ஆராய்ந்துள்ள போதிலும் இறுதித் தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லையெனவும் அனைத்து மக்களின் வாக்குகளையும் பெற்றுக்கொள்ளக் கூடிய ஒருவர் முன் நிறுத்தப்படுவார் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் இருக்கின்ற போதிலும் முக்கிய தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே வேட்பாளரை ஆதரிப்பர் எனவும் ரஞ்சன் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment