ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மங்கள சமரவீரவை நியமிக்க வேண்டும் என கட்சி ஆதரவாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஊடாக பிரச்சாரங்கள் இடம்பெற்று வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
ஜனாதிபதியாவதே ஒவ்வொரு அரசியல்வாதியின் கனவும் என அண்மையில் மங்கள தெரிவித்திருந்ததையடுத்து, துணிகரமாக தனது கருத்துக்களை முன் வைத்து அதில் நிலையாக இருந்து வாதிக்கக் கூடிய மங்கள போன்றவர்களே தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும் என சிங்கள கலைஞர்கள் வட்டாரங்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளன.
எனினும், சஜித் பிரேமதாசவையே தான் ஆதரிப்பதாக மங்கள தெரிவித்துள்ளமையும் ஏலவே மும்முனைப் போட்டி நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment