ஐக்கிய இராச்சியத்திலிருந்து கன்டைனர்களில் கொண்டுவரப்பட்டுள்ள கழிவுகள் மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட அனுமதியின் பின்னணியிலேயே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் மலிக் சமரவிக்ரம.
சர்ச்சைக்குள்ளாகியுள்ள விடயம் தொடர்பில் முழுமையான விசாரணையை நடாத்துமாறு நீதியமைச்சர் உத்தரவிட்டுள்ள நிலையில் இறக்குமதி அனுமதிக்கான சுற்றுநிருபம் மஹிந்த காலத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக மலிக் விளக்கமளித்துள்ளார்.
இலங்கை நிறுவனம் ஒன்றினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ள இக்கழிவுகளுள் மனித எச்சங்களும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அதனை விசாரிக்க ஐக்கிய இராச்சிய அரசும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment