மீண்டும் அமைச்சுப் பதவியேற்றுள்ள ரிசாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றைக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை தாம் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கிறார் மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க.
ரிசாத் பதியுதீன் ஊழல் புரிந்திருப்பதாகவும், தீவிரவாதத்துக்குத் துணை போனதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கான எழுத்து மூல முறைப்பாடுகளை வழங்க விசேட பொலிஸ் குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தது.
எனினும், அவ்வாறு எவ்வித முறைப்பாடும் குறித்த காலப்பகுதிக்குள் தரப்படவில்லையென நாடாளுமன்றுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்த நிலையில் இவ்விவகாரம் சற்று தணிந்திருந்தது. தற்போது ரிசாத் பதியுதீன் அமைச்சுப் பொறுப்பை ஏற்ற பின்னர் மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தயாராவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment