எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்வித ஒப்பந்தத்திலும் ஈடுபடவில்லையென தெரிவிக்கிறது சுதந்திரக் கட்சி.
ஐ.தே.க - ஸ்ரீலசுக கூட்டணி கடந்த ஒக்டோபருடன் முடிவுக்கு வந்த நிலையில் இரு கட்சிகளின் தலைவர்களும் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டுள்ளனர். இதேவேளை, மஹிந்த ராஜபக்சவுடனான கூட்டணி முயற்சியும் கைகூடாத நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்திருக்கிறது.
இந்நிலையிலேயே மீண்டும் சு.க - ஐ.தே.க இணக்கப்பாடு எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்ததோடு அதனை தற்சமயம் சு.க தரப்பு மறுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment