பெரமுனவுடன் பேச்சுவார்த்தையெனும் பேரில் அனைத்து பதவிகளையும் மஹிந்த அணிக்கு தாரைவார்த்து மஹிந்தவின் காலில் வீழ்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாரில்லையென தெரிவிக்கிறார் தயாசிறி ஜயசேகர.
ஒக்டோபர் அரசியல் பிரளயத்தின் பின் சிறிது காலம் மைத்ரி ஜனாதிபதியாகவும் மஹிந்த பிரதமராகவும் பணியாற்ற முடியும் என்றால் ஏன் அவ்வாறே எதிர்காலத்தில் கூட்டாக இயங்க முடியாது? எனவும் கேள்வியெழுப்பியுள்ள அவர், அனைத்து பதவிகளையும் தமக்கே தருமாறு பெரமுனவினர் கோருவதாக தெரிவிக்கிறார்.
இதேவேளை, புதிய கூட்டணியொன்று அமைப்பதற்கான பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment