இலங்கையில் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளது இஸ்லாமிய நாடுகளுக்கிடையிலான கூட்டுறவுக்கான அமைப்பு.
ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து பல குழுக்கள் முஸ்லிம் விரோத, வெறுப்பூட்டும் பேச்சுக்களை பரவலாக பேசி வருகின்ற அதேவேளை அரசு அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கத் தவறி வருகிறது. இந்நிலையிலேயே, இது பற்றி கவலை வெளியிட்டுள்ள ஓ.ஐ.சி இச்செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படாவிட்டால் முஸ்லிம்களுக்கு எதிரான இனவன்முறைகள் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 7ம் திகதி கண்டியில் ஞானசார தலைமையில் பாரிய மாநாடொன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment